குடிமைப்பணி தேர்வு.. சென்னையில் 16,626 பேர் பங்கேற்பு

சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குடிமைப்பணி (முதல்நிலை) தேர்வு, இன்று (மே.24) நடைபெற்றது. இத்தேர்விற்காக சென்னை மாவட்டத்தில் 23,120 தேர்வர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 16,626 தேர்வர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். 6,494 பேர் தேர்வு எழுத வரவில்லை. முதல் நாள் காலை 9.30 முதல் 11.30 வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2.30 முதல் 4.30 வரையிலும் நடைபெற்றது. 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்தி