நடிகர் ஜீவாவின் தந்தையும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனருமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். 'நாட்டாமை', 'சூரியவம்சம்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், தனது பூர்வீக ஊருக்குச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.