நான் முதல்வன், புதுப்புது நூலகங்கள், தமிழ்ப் புதல்வன் திட்டம் என மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சிக்காக திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். ஆனால், தவெக ஆட்சியில் காலை 6 மணி முதல் ஒரு நாளைக்கு 6 சினிமா காட்சிகளைத் திரையிட அனுமதி அளித்துள்ளதாக விமர்சித்த அவர், இது இளைய தலைமுறையின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நடவடிக்கை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.