தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் சத்யேந்திரா (65), உடல் நலக்குறைவால் இன்று (மே 28) காலமானார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. ஏழாவது மனிதன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், மண்வாசனை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சத்யா, ஜெயில் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக சினிமா விமர்சகராக செயல்பட்டு வந்த சத்யேந்திரா, விஜய் நடித்த லியோ படத்தை விமர்சனம் செய்து கவனம் பெற்றார்.