நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த சௌசௌ, சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சிறந்த இயற்கை மருந்தாக விளங்குகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன், சிறுநீரக கற்களை கரைக்கவும் உதவும். குறைந்த விலையில் கிடைக்கும் இக்காய்கறியை உணவில் சேர்ப்பதன் மூலம் பக்கவிளைவுகளின்றி இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும். ஒட்டுமொத்த உடல் நலனை பேண சௌசௌவை அன்றாட உணவில் சேர்த்து கொள்ளுமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.