பொதுவாகவே நம் நாட்டில் சுப காரியங்கள் என்றாலே அதை செய்வதற்கு சரியான கௌரி நேரம் அல்லது நல்ல நேரத்தை மக்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதே போல் இன்னொரு சூப்பரான காலமும் உள்ளது. அதுதான் குளிகை காலம். குளிகை நேரத்தில் ஒரு நல்ல காரியம் செய்தால், அதேபோல் திரும்ப திரும்ப நடைபெறும் என்று நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த குளிகை காலத்தில் வீடு கட்டுவது, வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேசம் செய்வது, கடனை அடைப்பது, சொத்து வாங்குவது, நகை வாங்குவது, போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.