சிரஞ்சீவியின் 158-வது படத்தில் இணைந்த அனுராக் காஷ்யப்

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டாரான சிரஞ்சீவி, பாபி கொல்லி இயக்கத்தில் நடிக்கும் 'காகா' திரைப்படத்தில் பாலிவுட் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 'வால்டேர் வீரய்யா' வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இக்கூட்டணியின் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும், 'சத்யம்' என்ற கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கும் இத்திரைப்படம், வரும் 2027-ம் ஆண்டு ஜன.13-ம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕