டெல்லியில் செப்டம்பர் 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ளார். 2019-ல் சென்னை மாமல்லபுரம் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பின் அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். உலகளாவிய போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில் நிகழும் இப்பயணம், ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியா-சீனா உறவிலும் பிரிக்ஸ் கூட்டமைப்பிலும் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.