உயிரினங்களின் இதய துடிப்பை பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் மாறுபடும் என ஆய்வுகள் கூறுகின்றன. சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள 'ஆன்டி-ஏஜிங்' என்ற புதிய மாத்திரை, எலிகளின் ஆயுளை அதிகரித்துள்ள நிலையில், மனிதர்களின் ஆயுளையும் 150 ஆண்டுகளாக அதிகரிக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த மாத்திரை வயதான செல்களை அழித்து ஆரோக்கியமான செல்களை பாதுகாப்பதன் மூலம் ஆயுளை நீட்டிப்பதாக லான்வி பயோசயன்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.