செங்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன போர்க்கப்பல் ஒன்று தனது விமானங்களை லேசர் கற்றைகளால் குறிவைத்ததாக ஜெர்மனி குற்றம் சாட்டியுள்ளது. ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு மத்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் 'ஆபரேஷன் ஆஸ்பைட்ஸ்'-ஐ தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, எந்த எச்சரிக்கையும் இல்லாமல் ஜெர்மன் விமானத்தின் மீது லேசர் வீசப்பட்டதை அடுத்து, சீனத் தூதரை அழைத்து கடுமையான ஆட்சேபனை தெரிவித்ததாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.