வட கொரியாவுக்கு மீண்டும் பயணிகள் ரெயில் சேவை: சீனா அறிவிப்பு

கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டிருந்த சீனா–வடகொரியா இடையேயான பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. வருகிற வியாழக்கிழமை முதல் சீனாவின் பீஜிங் நகரில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இந்த ரெயில் வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்படும். மேலும் சீனாவின் எல்லையோர நகரமான டான்டோங் இருந்து பியாங்யாங்கிற்கு தினசரி ரெயில் சேவை இயக்கப்படும் என்றும் சீன ரெயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி