கார் மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற சிறுவர்கள் பலி

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் அருகே கார் மோதிய விபத்தில் 12 வயது சிறுவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் இருந்து குமரி நோக்கி சென்ற கார் பழவூர் அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் சிறுவர்கள் வினிஷ் (12), விஷ்வா (12) ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி