ஐரோப்பிய நாடான டென்மார்க் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற இலையுதிர் காலக் கூட்டத்தொடரில் பேசிய அந்நாட்டு பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் நம் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை நாசம் செய்கிறது என்று கூறினார். 11 முதல் 19 வயதுடைய டென்மார்க் சிறுவர்களில் 60 சதவீதம் பேர் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதை விட வீட்டிலேயே இருக்க விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டார்.