2026 ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் டெல்லியில் 800-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போன 807 பேரில் 509 பேர் சிறுமிகள் மற்றும் பெண்கள். இதில் 235 பேர் மீட்கப்பட்ட நிலையில், 572 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் மாயமாகி இதுவரை கண்டறியப்படாதோர் எண்ணிக்கை 52,000-ஐ கடந்துள்ளதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.