திருப்பத்தூர் அருகே ஆம்பூரில் நாய்க்கு வைக்கப்பட்ட கெட்டுப்போன கோழி இறைச்சியைச் சாப்பிட்ட இரண்டு பெண் குழந்தைகளில், 3 வயது மூத்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. சுதீஷ் - ஸ்ரேயா தம்பதியினர் மே 10-ல் சமைத்த கோழி இறைச்சியைக் கடந்த மே 12 அன்று நாய்க்கு வைத்துள்ளனர். விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் அதை எடுத்துச் சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இச்சோகம் நிகழ்ந்துள்ளது.