திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி விக்னேஷ்–சுகன்யா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நட்பாக பழகிய பெண், தடுப்பூசி போடுவதாக கூறி குழந்தையை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் நடத்தி, துறையூர் அருகே குற்றவாளி பெண்ணை கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
நன்றி: நியூஸ் தமிழ்