இடைத்தேர்தல் பரப்புரைக்கு முதலமைச்சர் விஜய் தாராபுரம் வருகை தருவார் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். தாராபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெறுவோம். ஊழலை ஒழிப்பதை செய்து காட்டியுள்ளோம். மாறி மாறி பேசிக்கொண்டு கள்ள உறவு வைத்திருப்பவர்களுக்கு பாடம் புகட்ட இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்துவார்கள். மறைமுக உறவில் இருக்கும் திமுக, அதிமுகவுக்கு பாடம் கற்பிப்போம் என்று கூறினார்.