கருணாநிதிக்கு முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (ஜூன்.03) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், “முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்” என முதலமைச்சர் விஜய் பதிவு வெளியிட்டார். மேலும், “தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியலில் கலைஞரின் பங்களிப்பை நினைவு கூர்கிறேன். ஆட்சி நிர்வாகம், மாநில உரிமைகள் போன்றவற்றிலும் அவரது பங்களிப்பை நினைவு கூர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி