எதிர்க்கட்சிகள் விரிக்கும் எந்தவொரு சதி வலையிலும் சிக்கிவிடாதீர்கள் எனத் தவெக MLAக்களுக்கு முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக அரசை முடக்கத் திமுக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், கூட்டணிக் கட்சிகளைத் தவிர மற்ற அனைவரும் எதிரிகளே என்றும் அவர் கூறினார். மேலும் தவறான வழியில் செல்லும் எம்எல்ஏ-க்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
நன்றி: பாலிமர்