தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், நாளை (மே.12) விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக விசிக உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரை விஜய் நாளை சந்திக்கிறார். இன்றைய தினம் (மே.11) முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, அவரது வீட்டில் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.