பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி 1 கி.மீ தூரத்திற்குப் புதிய கட்டுமானங்களுக்குப் பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்கக் கோரும் ரியல் எஸ்டேட் சங்கங்களின் கோரிக்கை ஆபத்தானது எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையின் இயற்கை அரணான பள்ளிக்கரணையை அழிக்க திமுக அரசு துணைபோகக் கூடாது என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தின் அனைத்து சதுப்பு நில எல்லைகளையும் உடனே வரையறுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.