தாராபுரத்தில் இடைத்தேர்தல் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து, வரும் செப்.30-ம் தேதி முதலமைச்சர் விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். தாராபுரம் - உடுமலை சாலையில் சுமார் 10,000 பேர் வரை பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமான தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தாராபுரம் தொகுதி மக்களுக்கு மட்டும் 'கியூஆர் கோடு' அடங்கிய சிறப்பு அனுமதி அட்டை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.