குட்கா கடத்தலை தடுத்த காவலரை பாராட்டிய முதலமைச்சர் விஜய்

கோவையில் குட்கா கடத்தலை தடுத்த தலைமைக் காவலர் வேல்முருகனை முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அண்மையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் வாகன தணிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் வந்த கார் தப்ப முயன்றுள்ளது. அப்போது காரின் மேற்கூரையில் தொங்கியபடி சுமார் 40 கிமீ உயிரைப் பணயம் வைத்து சென்று வேல்முருகன் அந்த கும்பலை பிடித்தார். அவரின் வீரதீர செயலை பாராட்டும் வகையில் சென்னைக்கு அழைத்து முதலமைச்சர் விஜய் பரிசு வழங்கி கௌரவித்தார். 

நன்றி: எங்கள் தேசம்

தொடர்புடைய செய்தி

✕
✕