இடைத்தேர்தலில் 2 கட்சிகளை காலி செய்ய முதல்வர் விஜய் பிளான்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், இரு தொகுதிகளையும் கைப்பற்றினால் எம்ஜிஆர் இமேஜ் கிடைக்கும் என்றும், திமுக-அதிமுகவை பலவீனப்படுத்த முடியும் என்றும் தவெக ஆலோசகர்கள் முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசனை வழங்கியுள்ளார்களாம். இதற்கு பதிலளித்த விஜய், "நானும் அதையேத்தான் சொல்கிறேன். இடைத்தேர்தலின் வெற்றி நமக்கு முக்கியமானது. திமுக-அதிமுக இரண்டையும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்யலாம். அதற்கான வழிகளை ஆராயுங்கள்" என அறிவுறுத்தியுள்ளாராம்.

தொடர்புடைய செய்தி

✕
✕