பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் சிறப்பாகப் பணியாற்றிய 180 காவல்துறை, சீருடை அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களுக்கு 'அண்ணா பதக்கம்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தங்களது கடமையைச் செவ்வனே ஆற்றி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த இவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நன்றி: பாலிமர்