பிஞ்சு குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சிய முதலமைச்சர் விஜய்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிறந்த பச்சிளம் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சி வாழ்த்தினார். தொடர்ந்து தாய், சேய் ஆரோக்கியம், சிகிச்சை முறைகள், தேவையான வசதிகள் குறித்து அதிகாரிகள், தாய்மார்களிடம் கேட்டறிந்தார். முறையான மருத்துவ சிகிச்சையும், சேவைகளையும் விரைந்து வழங்க அறிவுறுத்தினார். முதலமைச்சர் விஜய்யை பார்த்த இளம் தாய்மார்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் வழங்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி