மதுராந்தகத்தை தொடர்ந்து நாளை தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மூலம் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விஜய் 114 கிமீ பயணித்து 23 இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். இதற்காக தாராபுரம் புறநகர் பகுதிகளிலும், பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதிகளிலும் உள்ள சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், 2 தொகுதிகளிலும் நாளை இறுதிகட்ட பரப்புரையில் அரசியல் கட்சியினர் ஈடுபடுகின்றனர்.