வயலில் டிராக்டர் ஓட்டி முதல்வர் விஜய் வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு எலப்பாக்கம் பகுதியில் இன்று (அக்.2) ரோடு ஷோ மேற்கொண்ட CM விஜய், பிரச்சாரத்தின் போது திடீரென வயலில் இறங்கி டிராக்டரை ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது. எளிய முறையில் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி CM விஜய் வாக்கு சேகரித்த இந்த சம்பவம், தொண்டர்களிடையேயும் அப்பகுதி விவசாயிகளிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕