உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு, தமிழக முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டத்துறையில் நீண்ட நெடிய அனுபவமும் திறமையும் கொண்ட மோகனாவின் இந்த உயரிய நியமனம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மூத்த வழக்கறிஞராக பணியாற்றி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் 2-வது பெண்மணி இவர் என்றும் முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
நன்றி:News18