சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு முதலமைச்சர் விஜய் வந்தபோது, அவரை பார்த்த பொதுமக்கள் ஆர்வத்துடன் அழைத்தனர். இதையடுத்து, அவர்களிடம் அருகில் சென்ற முதலமைச்சர் விஜய், பொதுமக்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். அப்போது அங்கிருந்தவர்கள் விஜயை உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்த நிலையில், தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
நன்றி: polimer