ஈரோடு வெள்ளோட்டில் காலிங்கராயனின் வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன., 18) திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்று சிலையை திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் 744 ஆண்டுகளுக்கு முன் நதிநீர் இணைப்புக்கு முன்னோடியாக பவானி ஆற்றில் தடுப்பனை கட்டி வாய்க்கால் வெட்டிய காலிங்கராயன், பாசன வசதி ஏற்படுத்தி விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றினார்.
நன்றி: News18