'டிட்வா' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் சுமார் 950 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட 2 கப்பல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.6) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இலங்கைக்கு தமிழ்நாடு அரசு நீட்டியுள்ள இந்தக் 'உதவிக்கரம்' மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்கள் விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:News18