தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர்கூட விடுபட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், "மீண்டும் திமுக ஆட்சி அமைத்திடக் கூடாது என்பதற்காக பல்வேறு திட்டமிடல்களைச் பாஜக செய்து வருகிறது, எந்தவொரு தகுதி இல்லாத வாக்காளரையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துவிடக் கூடாது" என கூறியுள்ளார்.