முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். உத்தங்குடியில் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் தனது சகோதரர் மு.க.அழகிரியுடன் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின், முதல்முறையாக மு.க.அழகிரி இல்லத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.