முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தில் திடீர் மாற்றம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளவிருந்த மாவட்ட சுற்றுப்பயணத்தின் தேதிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளன. புதிய அட்டவணைப்படி, வருகிற 24 மற்றும் 25ஆம் தேதிகளில் அவர் குமரிக்கு வருகை தர உள்ளார். முதல் நாள் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவை திறந்து வைக்கிறார். பின்னர், நாகர்கோவில் வேப்பமூடு கட்டப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி