கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச., 26) கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் டிரோன் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.