கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (நவ.19) ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், குமரி ஆகிய 3 தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்து, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்க உள்ளார்.

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி