தமிழக முதலமைச்சர் விஜய் நாளை (ஜூலை 10) கரூரில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்விற்காக சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றிலும் 2 அடுக்குகளாக பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மேடைக்கு வலதுபுறமாக வரிசையில் அமரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மேடைக்கு அருகே இடதுபுறத்தில் முதலமைச்சருக்கான பிரத்யேக வழியும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்ல 2 வழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.