தமிழக அரசின் 'முதலமைச்சர் திறனாய்வு தேர்வு'-க்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜன.12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் சிறந்து விளங்கும் 1,000 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.10,000 உதவித்தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதற்கான தேர்வு வரும் ஜன.31-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தகுதியுள்ள 10-ம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.