மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் இன்று (நவ.18) பேட்டியளித்த அவர், "தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். வாக்காளர் பட்டியலை முறைப்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நீண்ட நாள் கோரிக்கை" என தெரிவித்துள்ளார்.
நன்றி:NewsTamil24/7