பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், பாடகர்கள் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் வசித்து வந்த சாலைகளுக்கு அவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு, சாலை பெயர் பலகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். குறிப்பாக, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் வசித்து வந்த டிமாண்டி சாலைக்கு “எம்.எஸ். விஸ்வநாதன் சாலை” என பெயர் சூட்டப்பட்டது.
நன்றி: திமுக ஐடி விங்