+2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டங்களை பின்பற்றக்கூடிய +2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 2) முதல் தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுத இருக்கிறார்கள். இந்நிலையில், நாளை தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார். 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி