தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கான நிலுவை தொகையை விரைந்து விடுவிக்க கோரி, தமிழக முதலமைச்சர் இன்று (மே 27) டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த அரசுமுறை பயணத்தின் போது, அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மாநிலத்தின் நிதி தேவைகள் மற்றும் நிலுவை நிதி பங்கீடு குறித்து முக்கிய கோரிக்கைகளை விடுக்கவுள்ளார். இச்சந்திப்பு மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொய்வின்றிச் செயல்படுத்த வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:பாலிமர்