தமிழக இளைஞர்களின் கனவுகளையும், அவர்களின் எதிர்கால தேவைகளையும் கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'என் கனவு என் எதிர்காலம்' என்ற புதிய திட்டத்தை இன்று (பிப்.4) தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்களின் இலக்குகளையும், கோரிக்கைகளையும் https://enkanavu.tn.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். அடுத்த 20 நாட்களுக்கு மட்டும் செயல்படும் இத்தளத்தின் மூலம் கருத்துகள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.