தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் ஜோசப் விஜய் இருநாள் பயணமாக இன்று (மே.27) டெல்லி செல்கிறார். மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடியைச் சந்தித்து கல்வி நிதி, மெட்ரோ ரயில் திட்டம், ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசுகிறார். தொடர்ந்து மத்திய அமைச்சர்களையும், தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் காந்தியையும் சந்திக்கிறார். ஜேஎன்யு-வில் திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைக்கிறார்.