தவெக அரசு ஆட்சியமைத்துள்ள நிலையில், தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், புதியவர்கள் வந்திருக்கிறார்கள், அவர்களுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார். மேலும், "இரண்டு நாட்களில் ஆட்சியைப் பற்றிப் பேசுவது ஜோசியமாகத்தான் இருக்க முடியும். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அனைவருமே புதியவர்கள்தான். எனவே, புதியவர்களைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது, காத்திருந்து கண்காணிப்போம்" என கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18