காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சேலம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் இன்று முதலமைச்சர் 3,000 கனஅடி நீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணை சார்ந்த வரலாற்று புகைப்படங்களை பார்வையிட்ட முதலமைச்சருக்கு காவிரி வடிநில வரைபடம் குறித்து அதிகாரிகள் விளக்கினர். தொடர்ந்து விவசாயிகளிடம் பேசிய முதலமைச்சர், காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொண்டார்.