21 சமூக நீதிப் போராளிகளின் மணிமண்டபத்தை திறந்துவைத்த முதல்வர்

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் 1987 இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர், அங்கிருந்த போராளிகளின் உருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு அவர்களின் குடும்பத்தாருக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து முதல்வர் அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கவுள்ளார்.

தொடர்புடைய செய்தி