தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை.8) ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் துறைகளின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.