தமிழகத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால், தலைமை செயலகத்தில் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது, மாநிலத்தின் தற்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு நிலவரம் குறித்து புதிய டிஜிபியுடன் முதல்வர் தீவிர ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.